உலகின் மிகப் பெரிய தமிழ் நூல் அங்காடி தமிழ்நூல்.காம்
 

தமிழ்நூல்.காம் மின்னம்பல தளத்தைப் பயன்படுத்துவது எப்படி?

தமிழ்நூல்.காம் மின்னம்பல தளத்தில் 36000இற்கும் அதிகமான தமிழ் நூற் தலைப்புகளை 82 பாடவகைகளில் தொகுத்துள்ளோம்.

இத்தளத்தில் எந்த ஒரு தமிழ் நூலையும் தலைப்பு வாரியாகவோ, ஆசிரியர் வாரியாகவோ, பாடவகை வாரியாகவோ தேடலாம், வாங்கலாம்.

பாடவகை வாரியாக தேட, பாடவகைத் தேடல் குமிழில் சொடுக்குக.

தலைப்பு அல்லது ஆசிரியர் வாரியாகத் தேட, தட்டச்சுத் தேடல் குமிழில் சொடுக்குக. தமிழ் விசைப்பலகை திரையில் தெரியும். எலியால் விசைகளைச் சொடுக்கி தேவையான சொல்லைத் தட்டச்சுச் செய்து தேடுக.

தேவையான நூல்களை கூடைக்குள் சேர்க்க.

பின், கூடையைச் சரிபார்க்க.

பின், கூடைக்குள் சேர்த்த நூல்களின் பட்டியலை உறுதி செய்க.

அப்பட்டியலைக் கோப்பாகச் சேமித்து, எமக்கு மின்னஞ்சல் இணைப்பாக அனுப்புக.

உங்கள் ஆணைப்பட்டியலில் உள்ள நூல்களின் இருப்பைச் சரிபார்த்து, கூறுவிலையை அறியத் தருவோம்.

உரிய தொகையை நீங்கள் அனுப்பியதும், நூல்களைப் பெற்றனுப்புவோம்.